Posts

Showing posts from March, 2021

Women's day மகளிர் தினத்தின் மதிப்பின் இன்றைய மாற்றங்கள்

Image
கண்ணகி, சீதை, மண்டோதரி, சாவித்திரி முதலிய கற்புக்கரசிகள் போற்றிப் புகழப்பட்ட இந்த பூமியில், இன்று பிரபலமாக இருக்கும் பெண்கள் யார்? (அரசியல்வாதிகளைத் தவிர்த்தால்) திரைப்படத் துறையில் இருப்பவர்களும் மாடலிங் துறையில் இருப்பவர்களுமே பிரபலமாக உள்ளனர். இந்த இரண்டு துறைகளுமே பெரும்பாலும் உடலைக் காட்டி பணம் சம்பாதிக்கும் துறைகளாகவே உள்ளன என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை. இன்றைய சமுதாயத்தில் வளரும் ஆண்கள், பெண்கள் என எல்லாரும் “பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்” என்று தப்புக் கணக்குப் போட்டபடியே வளர்கின்றனர். கற்புக்கரசிகளைப் பார்த்து வளர்ந்த சமுதாயம், இன்று யாரைப் பார்த்து வளர்கிறது? கலி யுகத்தின் தாக்கத்தினால் ஒவ்வொரு நாளும் பண்பாடு சீரழிகிறது. அதிலும் குறிப்பாக, பாலியல் சார்ந்த பண்பாடு வெகு வேகமாக சீரழிந்து வருகிறது. “கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்” என்று பெண்கள் நம்பிய காலம் மலையேறி விட்டது. இத்தகு பழமொழிகளை இன்றைய மக்கள் காதில்கூட கேட்பது இல்லை. கட்டிய மனைவியைத் தவிர வேறு யாரையும் நோக்காமல், அவளுக்காகவும் குடும்பத்திற்காகவும் எல்லா சிரமத்தையும் ஏற்று, கண்ணியமாக வாழ்ந...

New Married life surprise

Image
ஒரு திருமண வரவேற்பில் மணமக்களுக்கு அன்பளிப்பும், அதனுடன் இணைந்த ஒரு கடிதம் வந்தது..!! அதில் ஊரின் சிறந்த திரை அரங்கில், புதிய படத்துக்கான இரண்டு டிக்கெட்டுகள் இணைக்கப்பட்டிருந்தன..!! மேலும், ''இதை அனுப்பியவர் யார் என்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்'' என்றொரு குறிப்பும் இருந்தது..!! தம்பதிகள்இருவரும் எவ்வளவோ சிந்தித்துப் பார்த்தும் அவர்களால் யார்..?? என்று கண்டு பிடிக்க முடியவில்லை..!! இருந்தாலும் இலவசமாக வந்த டிக்கெட்டை அவர்களால்எடுத்துக்கொண்டு இருவரும் அந்த திரைப்படத்தை குறிப்பிட்ட நாளில் பார்த்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினர்..!! வீட்டை திறந்தவர்களுக்கு ஒரே அதிர்ச்சி..!! வீட்டிலிருந்த விலை உயர்ந்த பொருட்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன..!! வீட்டில் ஒரு கடிதமும் இருந்தது அதில், "என்னா..?? படம் சூப்பரா..??" என்று எழுதியிருந்தது..!! அவர்களது தேடலுக்கு பதில் கிடைத்தது..!! "ஐயோ..!! களவாணிப்பயலா அவன்..??" என்று..!! நீதி: ''இலவசம்'' யார் கொடுத்தாலும் அது கொள்ளை அடிப்பதற்கே..!! உலகில் இலவசம் என்று எதுவும் இல்லை..!! சிந்திப்போம்........